Thursday, April 11, 2024

ரஜினியின் ஜெயிலர்: மோகன்லாலுக்கு என்ன கதாபாத்திரம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் திலீப் குமார்  இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார்.

இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவருக்கு வில்லன்  கதாபாத்திரம் என கூறப்படுகிறது. அதே போல ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் உலவியது.  தற்போது, இப்படத்தில் அவர் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது அவருக்கு என்ன கதாபாத்திரம் என்று அறிந்துகொள்ளும் ஆர்வர் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

‘படத்தில் ரஜினியின் நண்பராக மோகன்லால் வருகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படவே.. அப்போது ரஜினி காப்பாற்றுகிறார்’ என்று ஒரு யூகத்தகவல் உலவுகிறது.

- Advertisement -

Read more

Local News