Friday, April 12, 2024

‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இணைகிறார்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் ‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநராக அன்பறிவ் சகோதரர்கள் பணியாற்றவிருக்கிறார்கள்.

இது தொடர்பான செய்தியையும், புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் இன்றைக்கு வெளியிட்டுள்ளார்.

அன்பறிவ் சகோதரர்கள் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற சண்டை இயக்குநர்களாக முத்திரை பதித்தவர்கள்.

2013-ம் ஆண்டு ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில்தான் சண்டை இயக்குநராக அறிமுகமானார்கள்.

அதன் பின்பு ‘மெட்ராஸ்’, ‘மாயா’, ‘கபாலி’, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’, ‘சத்ரியன்’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மெர்க்குரி’, ‘ஜூங்கா’, ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’, ‘நோட்டா’, ‘துப்பாக்கி முனை’, ‘சண்டைக் கோழி-2’, ‘தடம்’, ‘கீ’, ‘தேவ்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘கைதி’, ‘ஆக்சன்’, ‘கே.ஜி.எஃப்.சேப்டர்-2’, ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘ராதே’ ஆகிய புகழ் பெற்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

இதில் ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’ படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு தேசிய விருதையும் இந்தச் சகோதரர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் சிறப்பம்சமே அந்தப் படத்தில் இருந்த சண்டை காட்சிகள்தான். அதனால்தான் இந்தப் படத்திலும் இவர்கள் சண்டைக்கு வந்திருக்கிறார்கள் போலும்..!

- Advertisement -

Read more

Local News