இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ சமீபத்தில் வெளியானது. ரூ.125 கோடி செலவில் உருவான இப்படம், 900 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்திருக்கிறார். அதேபோல, வில்லனாக நடித்த குல்ஷன் தேவய்யாவும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார்.
தற்போது மாதவன் நடித்து வரும் ‘லெகசி’ வெப் தொடரில் கவுதம் ராம் கார்த்திக், நிமிஷா, அபிஷேக், வையாபுரி ஆகியோருடன் குல்ஷன் தேவய்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிரைம் திரில்லர் வகையில் உருவாகும் இந்த தொடர் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தவிர, பல தமிழ் படங்கள் தொடர்பாகவும் அவருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

