Touring Talkies
100% Cinema

Friday, November 14, 2025

Touring Talkies

தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதையை கேட்டு உண்மையில் நடுங்கி விட்டேன் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிக்க, அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. அதிரடி ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. அடுத்தவாரம் நவ., 21ல் படம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‛இப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இயக்குனர் அதை சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும்போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள் அதைதான் நானும் உணர்ந்தேன். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும் என்பது நம்ப கூடிய ஒரு விஷயம். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி என்றார்.

மேலும், அர்ஜூன் சார் உண்மையாகவே  ஜென்டில்மேன் தான். அவர் மேஜிக்கை நான் நேரில் பார்த்தது நல்லதொரு அனுபவம். நான் நன்றாக சண்டை காட்சி செய்ய அவர் முக்கிய காரணம். தான் இந்தப்படத்தில் அர்ஜுன் சார் தான் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News