பாலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப், தற்போது நடிகராகவும் பிசியாக வலம் வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா, லியோ, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தமிழில் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் தான் ‘அன் கில் 123’.

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார்.
இந்த படத்தில், சமூக வலைதளத்தில் பிரபலமாகும் இன்ப்ளூயன்சர் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வலைதளங்களின் மூலம் பிரபலமான ஒருவரை, வலைதள பயனர்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் தாக்கும்போது அந்த நபரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவர் என்ன நிலைக்கு தள்ளப்படுகிறார் என்பது மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

