கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். நான் ஈ, அருந்ததி, புலி போன்ற தமிழ் படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

இப்போது, கிச்சா மீண்டும் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47வது திரைப்படமாகும். இப்படத்திற்கு மார்க் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. மார்க் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில், ‘மார்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

