சிவா படத்தின் ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் நாகார்ஜுனா கலந்து கொண்டு பேசியபோது, அவரிடம் ‘சிவா’ திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் உங்கள் மகன்களில் நாகசைதன்யா, அகில் யார் அதற்கு பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நாகார்ஜுனா என் பையன்கள் இருவருக்குமே அந்த தைரியம் இல்லை நடிக்க மாட்டார்கள், இந்த படைப்பு அதுபோன்றது என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.


