பிரபாஸின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த “தி ராஜா சாப்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மாருதி. அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, பிரபாஸ் தனது படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த பதிவில் மாருதி குறிப்பிட்டிருப்பதாவது , 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாஸ் சினிமா உலகில் தனது முதல் அடியை வைத்தார். இன்று அதே நாளில் ‘தி ராஜா சாப்’ படத்தின் படப்பிடிப்பு பயணத்தை நிறைவு செய்கிறார். அவரது வெற்றிகரமான சினிமா பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருப்பது எனக்கு பெருமையும் அதிர்ஷ்டமும்,” என்று அவர் கூறியுள்ளார்.
பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சஞ்சய் தத்தும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திகில்-காமெடி திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி தமிழில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

