தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதா நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் யோகி பாபு இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலக புகழ்பெற்ற முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்தபின் சில ரசிகர்கள் யோகி பாபு உடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடந்த மாதம் 6ம் தேதி யோகி பாபு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


