போர் தழுவிய கதை மாந்தங்களைக் கொண்ட தனது 54வது படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதனுடன், தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படமான ‘தேரே இஷ்க் மே’யிலும் நடித்துள்ளார். ஆனந்த் எல். ராய், தனுஷ் நடித்த முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகியவற்றை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய காதல் திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார்.
இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க காதல் களத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தனது 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் புரமோஷன் பணிக்காக நடிகர் தனுஷ் மும்பைக்கு சென்றுள்ளார். நேற்று மும்பையில் இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

