சென்னையில் நடைபெற்ற ‘மிடில்கிளாஸ்’ திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது வாழ்க்கைப் போராட்டங்களை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

அதில், சினிமா மீதான ஆசையால்தான் சென்னை வந்தேன். என் முதல் படம் வெளியான அதே நாளில் என் திருமணமும் நடந்தது. ஆனால், அதற்கு முன் நான் கடுமையாகப் பாடுபட்டேன். ஒருமுறை வேலைக்காக பெங்களூரு சென்றேன்; அப்போது மாதம் ₹5,000 சம்பளம்தான் கிடைத்தது. பின்னர், அந்த நிறுவனத்தின் சார்பில் ப்ளைட்டில் மீண்டும் சென்னைக்கு வரும்போது என்னிடம் பணம் மிகவும் குறைவாக இருந்தது.
அந்த நேரத்தில் விமான நிலையத்தில் நடந்த ஒரு குலுக்கல் போட்டியில் டிவி பரிசாக எனக்கு வந்தது. ஆனால், அதை பெற சில நடைமுறைகளுக்காக ₹300 கட்டணமாகக் கேட்டார்கள். என்னிடம் இருந்தது ₹150 மட்டுமே. மீதியைக் காண முடியாமல் தவித்தேன். இறுதியில் அந்த டிவியை வாங்க முடியவில்லை. இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தபின் தான் இன்று நான் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளேன். தற்போது அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான எந்தப் பற்றாக்குறையும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ‘மிடில்கிளாஸ்’ படத்துக்காக எனக்காகப் பணியாற்றிய பிரணவ் இசையமைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. என்னுடன் பணியாற்றிய பலரும் இன்று இசையமைப்பாளர்களாக உயர்ந்திருப்பதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

