நடிகை கிரிஜா ஓஹ் காட்போலி – கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள், கூகுள், சாட் ஜிபிடி போன்ற தளங்களில் பெரிதும் தேடப்பட்ட பெயராக மாறியிருந்தார். நீல நிற புடவையில், இயல்பான அழகுடன் அவர் அளித்த பேட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.

நடிகை கிரிஜா ஓஹ் காட்போலி ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்களிலும், ‘தாரே ஜமீன் பர்’ உள்ளிட்ட சில ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
37 வயதான கிரிஜா ஓஹ், 2004ஆம் ஆண்டிலிருந்து நடித்து வந்தாலும், சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தான் தென்னிந்தியாவிலும் பெயர் பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அளித்த யூடியூப் பேட்டியே. அந்த பேட்டியில், நீல நிற புடவையுடன் தோன்றிய அவரது எளிய தோற்றமும், பேசும் விதமும் ரசிகர்களை கவர்ந்தது.

