தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோக்களாக மாறிவரும் நிலையில் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு ஆகியோரின் வரிசையில் தற்போது ‘மிடில்கிளாஸ்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் முனிஸ்காந்த். ஆனால், படத்துக்கான நிகழ்ச்சிகள் மற்றும் புரமோஷன்களில் அவர், என்னை ஹீரோ என்று சொல்ல வேண்டாம், கதையின் நாயகன் என்று சொல்லுங்கள். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். சினிமாவில் நிலைநிற்றும் வரை பல சிரமங்களைச் சந்தித்தேன். எனது உழைப்பை வீணாக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த முனிஸ்காந்த், அதே நிறுவனமான ஆக்சிஸ் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் இந்தப் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்க முனிஷ்காந்த் அதிக சம்பளம் வேண்டாம் என நினைத்தாராம். ஆனால், அந்த நிறுவனத்தை ஆரம்பித்து, சமீபத்தில் காலமான தயாரிப்பாளர் டில்லிபாபு, அவருக்கு சொன்னபடி நல்லதொரு சம்பளத்தையும் வழங்கியதாக நடிகர் முனிஷ்காந்த பகிர்ந்துள்ளார்.
இதேபோல், இந்தப் படத்தின் நாயகியாக ‘சென்னை 28’ மற்றும் ‘அஞ்சாதே’ போன்ற படங்களில் நடித்திருந்த விஜயலட்சுமி நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு பெரிதாக ‘நான் இனி நடிக்க மாட்டேன், எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

