நடிகர் அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது ஏகே–64 திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ளதாகவும் அதேபோல் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‘கூலி’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘டிசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‘கைதி 2’ திரைப்படத்திற்குப் பிறகு அஜித் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

