டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்-க்கும் அவரின் காதலியான அகிலாவுக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “டூரிஸ்ட் பேமிலி பட வெற்றிக்குப் பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பதையும், இயக்குவதையும் ஒருசேர மேற்கொள்வேன். எனது இணை இயக்குனர் மதன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். அது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். அதற்கு பிறகு நான் இயக்கும் புதிய படத்தின் பணியும் அடுத்த ஆண்டே துவங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பள்ளிக் காலம் அதாவது 6ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே என் மனைவி அகிலாவை காதலித்து வந்தேன். இப்போது அந்தக் காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
அவர் கேட்ட திருமண பரிசாக, டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர் வழங்கிய சொகுசு காரில், அகிலாவுடன் சேர்ந்து சென்னை மற்றும் ஈசிஆர் பகுதிகளில் சுற்றி வந்தேன். வருங்காலத்தில் அவர் மற்றும் நம் குட்டி அபி உடன் சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு செல்லும் ஆசை உள்ளது,” என்று கூறினார்.

