செவன் ஹில்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மாரியப்பன் முத்தையா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சோழநாட்டான்’, பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் உருவாகிறது.

இந்தப் படத்தில் உதய் கார்த்திக், லுத்துப், சவுந்தரராஜன், நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் ஆகியோர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எஸ்.ஆர். சதீஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்; இசை அமைப்பை எஸ். பைசல் கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் கண்ணா கூறுகையில், நடிகர் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ்-ஐ உருவாகும் மற்றுமொரு திரைப்படம் இதுவாகும். மதுரை மற்றும் திருநெல்வேலியைத் தழுவிய பல கதைகள் தமிழ் திரையுலகில் வந்துள்ளன. ஆனால் சோழர்கள் வாழ்ந்த தஞ்சாவூர் மண்ணின் தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.