‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மூலமாக, திரும்பவும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். தற்போது பல புதிய வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் செயல்படக்கூடிய தன்மையால், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வழக்கமே. சமீபத்தில், அவர் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது திரைப்படப் பயணத்தைப் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அஜித் மற்றும் அர்ஜூன் தாஸ் போன்ற பிரபலங்களுடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. வருங்காலத்திலும் இப்படிப் பட்ட வலுவான மற்றும் திறமையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘குட் பேட் அக்லி’ படத்தில் நான் நடித்த நித்யா எனும் கதாபாத்திரம், எனது நடிப்புத் திறனை மேலும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் என் கனவுகளில் ஒன்றை நான் நனவாக்கியதாக நினைக்கிறேன். அவரிடமிருந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன்.
இனி வரப்போகும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்தே நடிக்கப்போகிறேன். ஒரு நாள் இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறேன். சினிமாவில் தொடர்ந்து முன்னேறுவதே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சமூக வலைத்தளங்களில் செயல்படுவது, என் கேரியரின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. எல்லோரும் என்மீது எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. ஆனால், நான் செய்யும் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றுள்ளார்