இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம், 16 வயதினிலே. அந்த படத்தை இயக்கும் முன்பே அவரும், நடிகர் ஜனகராஜூம் நண்பர்கள். ஒரே ஏரியாவில் வசித்தார்கள்.
பதினாறு வயதினிலே படத்துக்கு அடுத்ததாக கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்க இருந்தார் பாரதிராஜா.
இந்தக் கேள்விப்பட்ட ஜனகராஜ் பாரதிராஜாவிடம் தயங்கி தயங்கி வாய்ப்பு கேட்டார். அந்த படத்தில் ஒரு வயதான கதாபாத்திரம் கொடுத்தார் பாரதிராஜா.
இந்த சமயத்தில் ஜனகராஜூக்கு விபத்து ஏற்பட்டு முகம் வீங்கிவிட்டது. நடிக்க முடியாத நிலை. பதறிப்போய்விட்டார்.
அவரது காட்சியை தள்ளிவைத்து பிறகு எடுத்தார். அது மட்டுமல்ல.. படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளவும் அனுமதித்தார்.
இதை ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார் ஜனகராஜ்.