இசையமைப்பாளர் தேவா இசையமைக்கும் தொடர் ஒன்றுக்காக பாடலாசிரியர் வைரமுத்து பாடல் எழுதும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் வைரமுத்துவின் பாடலை இசையுடன் சேர்ந்து பாடுகிறார் தேவா.
பிறகு அவரிடம் வைரமுத்து “ஒன்று தெரியுமா தேவா சார்.. போனவாரம் ரஜினி சார் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இதில் 5 நிமிடங்கள் பாட்சா படம் பற்றித்தான் பேசினார்.
‘நீங்களும் தேவாவும் அந்த படத்திற்கு செய்த பங்களிப்பு என்னால் மறக்க முடியாது’ என்று ரஜினிகாந்த் வாய்விட்டு சொல்லி மகிழ்ந்து கொண்டாடினார்” என்கிறார் வைரமுத்து.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது பாட்சா திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நக்மா நாயகியாக நடித்திருந்தார். தேவாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.