Saturday, September 14, 2024

ரஜினியா கமலா ? அட்லீ சல்மான்கானை வைத்து புதிய படத்திற்கு போட்ட பிளான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அட்லி பாலிவுட்டில் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார், மேலும் கமல்ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்த படத்தில் ரஜினிகாந்த் இணைவார் என்று கூறப்பட்டது. அட்லி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், சல்மான் கானுடன் ரஜினியை இணைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசன் இந்தப் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதேபோல, அட்லி, ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து படம் இயக்கவுள்ளார் என்று முன்னதாக கூறிய நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் அந்த திட்டம் தாமதமாகியுள்ளது.

இதற்கிடையே, சல்மான் கானுடன் அட்லி இணைந்து இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News