Saturday, September 14, 2024

புஷ்பா 2 ரிலீஸ் தள்ளி போகிறதா? என்ன காரணம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் ஆனது.இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். புஷ்பா 2′ படம் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில தினங்களாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் அக்ஷய் குமார் நடித்த ‘கேல் கேக் மெய்ன்’ படத்தை அதே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதுபோல விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தையும் அதே தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர் என்றும் அதேபோல் அமரன் படமும் அன்றே வெளியிடு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘புஷ்பா 2’ வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என்பதால், மேலே கூறப்பட்ட படங்கள் ஆகஸ்ட் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. ‘புஷ்பா 2’ படத்தின் பணிகள் இன்னும் முடியாததால்தான் வெளியீடு தாமதம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News