நடிப்பு வேலைகள் மற்றும் உடற்பயிற்சியால் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா, தினசரி தனது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை விளக்கும் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
தினமும் காலை 6.30 மணிக்கு எழுந்தவுடன் சூரிய உதயத்தை பார்த்து, உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்துக் கொள்வேன். அதன் பிறகு ஆயில் புல்லிங் செய்வேன். 7 மணிக்கு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வேன். பிறகு விளக்கேற்றி கடவுளை வழிபடுவேன். காரில் செல்லும் போது கண்களை பாதுகாப்பதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வேன். 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவேன். 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்த பிறகு ஐஸ் பவுலில் முகத்தை கழுவி, பிரெஷ் ஆகுவேன்.
Video Link 🔗: https://www.instagram.com/reel/C_xC9w9yGKN/?igsh=Y2FnMzR6M2F3bTdt
அதன் பிறகு மேக்கப் செய்து, ஷூட்டிங்குக்கு செல்வேன். மாலை 6 மணிக்கு ரெட் லைட் தெரபி செய்து, 7 மணிக்கு டென்னிஸ் விளையாடுவேன். இரவு 9.30 மணிக்கு தியானம் செய்வேன். பின்னர் 10 மணிக்கு உறங்கச் செல்வேன். இவ்வாறு, தனது ஒரு நாள் முழுவதும் என்னென்ன செய்கிறேன் என்பதை நடிகை சமந்தா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.