Saturday, September 14, 2024

சிவகார்த்திகேயனும் லோகேஷ் கனகராஜூம்‌ ஒன்றாக ஒரே படத்தில் நடிக்கிறார்களா? #PURANANOORU

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் ‘புறநானூறு’ என்கிற படம் உருவாகுவதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். பின்னர் ஒரு சில மாதங்களில் புறநானூறு திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவருடன் இணைந்து மற்றொரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து சுதா கொங்கரா சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்தில் நடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News