பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கான். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை எடுத்துக் கொண்டே தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் சல்மான். அதோடு சிக்கந்தர் படத்திலும் அவர் ரிஸ்க் இல்லாத காட்சிகளில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பை, தாராவியில் செட் போட்டு நடைபெற்ற போது சல்மான்கான் கலந்து கொண்டார்.
காலில் முறிவு ஏற்பட்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டே படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் சல்மான்கான்!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more