Tuesday, September 17, 2024

இவங்க ரெண்டு பேரும் வேற லெவல்…புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது கோலிவுட் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் இப்போது இளம் நடிகர்களின் நிலையை தாண்டி சீனியர் நடிகர்களாக உயர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து, கோலிவுட்டில் இப்போது அதிக கவனம் பெறும் இளம் நடிகர்களாக கவின் மற்றும் மணிகண்டன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.இவர்களை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.

கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் திறமையான நடிகர்கள்.அதிலும் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் உண்மைக்கு மிக நெருக்கமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.எந்த விதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்று எளிமையாகவும் நம்பகமாகவும் நடிக்கக் கூடிய திறமை இவர்களுக்கு உள்ளது என்பது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வரமாகும் என செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டு பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இப்படி தனித்துவமான இயக்குநர் என அழைக்கப்படும் செல்வராகவனிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ள நிலையில், நடிகர் கவின் கண்டிப்பாக இதற்கு எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமோ இருப்பேன் சார், ரொம்ப நன்றி எனவும், மணிகண்டனும் செல்வராகவனின் பாராட்டை பார்த்து மிகவும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் படம் தான் சார் எனக்கு ரொம்பவே இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News