Saturday, September 14, 2024

ஆர்த்தியுடன் என் திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவது மிகவும் கடினமான ஒரு முடிவு… நடிகர் ஜெயம்ரவி விவகாரத்து குறித்து உருக்கமான அறிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, தனது நடிப்புப் பயணத்தை ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோவாக ஆரம்பித்தவர். அதன் பின்னர், “ஜெயம்” ரவி என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படங்களிலும், பல்வேறு இயக்குனர்களின் படங்களிலும் நடித்து, இன்று முன்னணி நடிகராக திகழ்கிறார். 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்த ஜெயம் ரவிக்கு, இந்நிறுவனத்தில் இரு மகன்கள் உள்ளனர்.

அவரது 15 ஆண்டுகளான திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனினும், சமீப மாதங்களில் இவர்கள் இருவரும் பிரிவதாக செய்தி வெளிவந்தது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. இவர்களை சேர்க்க குடும்பத்தினர் முயற்சி செய்த நிலையில், அது தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் பிரிவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். இதோ, நான் மிகவும் மனதைக் காயப்படுத்தும் ஒரு செய்தியை பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்ட நாட்களாக யோசித்துப் பார்த்த பிறகு, பல பரிசீலனைகள் மேற்கொண்ட பின், ஆர்த்தியுடன் என் திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதென்று மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் என்னுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளையும் மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு என்பதால், அதை என் தனிப்பட்ட விஷயமாகவே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முக்கியத்துவம் எப்போதும் எனது நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதுதான். நான் என்றும் உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஜெயம் ரவியாகவே இருப்பேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி,” என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News